நேசிக்கவில்லையென்றால் நன்றி

சோகமாயிருக்கும் தருணங்களில் நீ சிரித்துக்கொண்டே இரு, உன் சிரிப்புக்காகவே உன்னை ஒருவர் நேசிக்கக் கூடும்.

நீ யாரென்பதால் நான் உன்னை நேசிக்கவில்லை, உன்னருகில் இருக்கையில் நான் யாரென்கிறேன் என்பதால்தான்.

நீ சிந்தும் கண்ணீருக்கு அருகதை உடயவர்கள் யாருமில்லை, அந்த அருகதை உடயவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விடமாட்டார்கள்.

நீ விரும்பும் விதத்தில் ஒருவர் உன்னை நேசிக்கவில்லையென்றால், அவர் உன்னை மனதார நேசிக்கவில்லையென்றாகாது.

உன் கையை பற்றிக்கொள்ளும்போது உன் நெஞ்சைத் தொடுபவரே உண்மையான நண்பர்.

இந்த உலகத்தில் உள்ள பலரில் நீயும் ஒருவராய் இருக்கலாம், ஆனால் யாராவது ஒருவருக்கு நீயே உலகமாய் இருகலாம்.

உன்னுடன் நேரத்தை செலவிட விரும்பாதவருடன் நீ உன் நேரத்தை செலவிடாதே.

கடவுள் வேண்டுமென்றேதான் ஒரு நல்ல மனிதரை சந்திப்பதற்கு முன் பல கெட்ட மனிதர்களை சந்திக்க வைத்திருக்கிறார்போலும், அப்போதுதான் அந்த நல்ல சந்திப்பிற்காக நீ அவருக்கு நன்றி சொல்லுவாய்.

Leave a Reply