ஜீவன் உள்ளம்
நான் உதயமான நாள்.
இந்த நாள்….
ஒரு தேவி தன் வயிற்றின் சுமையை குறைத்த நாள்
என் தெய்வத்தின் முகத்தை முதல் முதல் பார்த்த நாள்
கருவறையை நான் கணக்கிட்டு முடித்த நாள்
இந்த உலகத்தை பர்க்க நான் உதயமான நாள்.
எனக்குப் பிடித்தவை,,,,,
மழலைக் குழந்தையின் சிரிப்பு பிடிக்கும்
அவற்றை தூக்கி விளையாட மிகவும் பிடிக்கும்
இளையராஜாவின் இசை பிடிக்கும்
இயற்கைக் காட்சிகள் எவ்வளவு என்றாலும் பிடிக்கும்
ஆட்டுக்குட்டியுடன் விளையாடப் பிடிக்கும்
மாட்டுக்கன்றுடன் ஓடிவிளையாடப் பிடிக்கும்
கோழிக்குஞ்சினை கொஞ்சிவிளையாடப் பிடிக்கும்
நாய்க்குட்டியுடன் பந்து விளையாடப் பிடிக்கும்
சரித்திர நாவல்கள் பிடிக்கும்
சவால்களே நிறையப் பிடிக்கும்
வால்மீகியின் இராமாயணம் பிடிக்கும்
வள்ளுவனின் குறளை மிகவும் பிடிக்கும்
தீர்த்தக்கேணியில் குளிக்கப் பிடிக்கும்
தீபாவளிப் பண்டிகையில் தண்ணியடிக்கப் பிடிக்கும்
எழுதுகோலால் உன்னை வரையப் பிடிக்கும்
எல்லாவற்றுக்கும் மேலால் உன்னைத்தான் எனக்குப் பிடிக்கும்
Leave a Reply
You must be logged in to post a comment.