கட்டிலிற் படுத்திருந்து….

கண்களிரண்டையும் மூடினால் கண்களுக்குள் நீயிருந்தாய்,
காதுகளிரண்டையும் மூடினால் காதுக்குள் உனது குரல்,
இதயத்தை ஒரு கணம் அழுத்திப் பார்த்தால்
என் இதயம் முழுவதும் நீதான்
சுவாசம், நாடி, நரம்பு, அங்கம் அனைத்திலும் நீதாண்டி இருக்கின்றாய்
அப்போதுதானடி உணர்ந்தேன்
எனக்குள் நீயில்லை
உனக்குள்தானடி நானிருக்கின்றேன் என்று


உன் ஜீவன் –

Leave a Reply